நேற்றைய தினம் (22) கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு பொருத்து வீடுகள் அமைக்கும் வேலைதிட்டதினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஊரியன்கட்டு பிரதேசத்தில் அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்திருந்தார்.
இதன் மூலம் வறுமை கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதிகள் அற்ற மக்கள் பலர் தாம் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழக்கூடிய வீட்டு வசதியினை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் இந்நிகழ்வுக்கு வாகரை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.