web log free
January 11, 2025

நுவரெலியாவில் தோட்ட குடியிருப்பில் தீ விபத்து

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட   நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் இன்று (01) ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 13 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் மூன்று வீடுகள் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த மூன்று வீடுகளிலும் இருந்த 15 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தின் போது, எவருக்கும் தீ காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு, பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்ட போது வீட்டில் .இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு  அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பல மணி நேரத்திற்கு பின்பு தீயை நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவுடன் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேவேளையில், இது தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்  தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd