web log free
January 11, 2025

உயிர்த்த ஞாயிறு விவகாரம்:அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

கடந்த 2019ம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கான அமைச்சரவை உபகுழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அறிக்கையை கையளித்தார்.

2021 பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் இக்குழு நியமிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை விரிவாக ஆராய்ந்த குழு, 78 பரிந்துரைகளை கண்டறிந்துள்ளது. அப்பரிந்துரைகளை எந்த நிறுவனத்தினால் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான பரிந்துரைகள் ஜனாதிபதி  இதற்கு முன்னர் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 இத்தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரையில் குற்றவாளிகள் யார் என்பது இதுரையில்கண்டறியப்படாத நிலையே காணப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd