மத்திய வங்கியின் பிணை முறி மோசடியால் ஏற்பட்ட நட்டம் தொடர்ந்தும் நாட்டின் பொருளாதாரத்திற்கு தாக்கம் செலுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதுள்ளாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019 ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் நான்காம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வரவு - செலவுத் திட்டத்தின் அரசாங்க சேவையாளர்களுக்கு 2500 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கி இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.