web log free
January 11, 2025

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேலும் தொடரும் கொரோனா அபாயம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தினைச் சேர்ந்த 1003 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 80 பேர் திருநெல்வேலி பாற்பண்ணைக் கிராமத்தின் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த அவர், 20 பேர் யாழ்.நகரின் நவீன சந்தைத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

இதேவேளையில், ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்ட 75 விற்பனை நிலையங்களுக்கு மேலதிகமாக 33 தொற்றாளர்கள் கடமையாற்றும் விற்பனை நிலையங்களை வகைப்படுத்துவதற்கான நடவடிக்கை தற்பொது மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும்,

தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத வர்த்தக நிலையங்கள் இன்று காலை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அவருடைய தரவின் அடிப்படையில்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 88 பேரும், யாழ்ப்பாணம் வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேரும், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேரும், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd