web log free
February 01, 2026

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 20 பேர் கைது

மன்னார்  மாவட்டம் சிலாவத்துறையில் இருந்து சட்டவிரோதமாக கடல்மார்கத்தில் வெளிநாடு செல்ல முயற்சித்த 20 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

 சந்தேக நபர்கள் 20 பேரும் 04 முச்சக்கர வண்டிகளில் கடற்கரைக்குச் சென்று அங்கிருந்து படகுகளின் உதவியில் நாடுகடக்க முயற்சிப்பதாக வெளியாகிய தகவலை அடுத்து சுற்றிவளைத்த கடற்படையினர் இவ்வாறு சந்தேகநபர்களைக் கைது செய்திருக்கின்றனர்.

இவர்களில் ஆண்கள் 15 பேரும், 5 பெண்களும் உள்ளனர்.
மேலும் இவர்கள் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வாழைச்சேனை, வத்தளை, புத்தளம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd