உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அதற்கான நீதியைக் கோருகின்ற கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, வடக்கில் போரில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க மக்கள் உயிரிழக்கும்போது ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (8) உரையாற்றிய அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதன் இந்தக் கேள்வியை சபையில் முன்வைத்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்துவருகின்ற கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்தின் தற்போதைய பேச்சுக்களுக்குப் பின்னால் அரசியல் நோக்கம் இருப்பதாகவே சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.