web log free
May 23, 2026

போதைபொருளுடன் இருவர் கைது

அம்பலாங்கொடை, அகுரல பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைபொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு கிலோ 65 கிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd