பிறந்திருக்கும் பிலவ புத்தாண்டை நாடு முழுவதிலும் தமிழ் மக்கள் சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து இன்று (14) கொண்டாடி வருகின்றார்கள்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடுமுழுதிலுமுள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பெருமளவிலான மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வழிபாடுகளில் ஈடுபட்டுவருவதனை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளையில், இன்று பிறந்த தமிழ், சிங்கள புத்தாண்டை மலையக பகுதிகளில் உள்ள மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு புதுவருடத்தை ஆரம்பித்தனா்.