இந்திய கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி வருகை தந்ததாக கடந்த மாதம் 10ம் திகதி மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த ரவீந்திரன் அருண் குரூஸ், வெலிசோர் றேகன் பாய்வா இரு மீனவர்களும் இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் டினேஸ் குணவர்தனவிற்கு குறித்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி கடிதம் ஒன்றை வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் ஊடாக கையளித்துள்ளனர்
சம்பந்தப்பட்டவர்கள் வழமை போன்று கடல் தொழில் நடவடிகையில் ஈடுபட கடலுக்கு சென்ற நிலையில் சீரற்ற கால நிலைகாரணமாக இந்திய கடல் பகுதிக்குள் சென்றதாகவும் தற்போது அவர்கள் இந்தியாவில் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு சிறையில் மிகவும் கஸ்ரப்படுவதாகவும் அங்குள்ள சட்டத்தரணி ஒருவர் மூலமாகவே தற்போது தாங்கள் அவர்களை தொடர்பு கொள்வதாகவும் சட்டத்தரணி ஊடாக ஜாமின் கோரிய போதும் ஜாமின் வழங்கப்படவில்லை என கைது செய்யப்பட்ட மீனவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
அதே நேரம், கொரோனா காரணமாக தொடர்சியாக கஸ்ரத்தில் உள்ளபோது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதால் ஒன்றை மாத கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகளுடன் மிகவும் கஸ்ரத்தில் வாழ்வதாகவும், இலங்கை எல்லையில் இந்திய மீனவர்கள் ரோலர் படகில் மீன்பிடி நடவடிகையில் ஈடுபடும் போது கைது செய்யப்பட்டால் இலங்கை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்வதாகவும், ஆனால் இந்தியாவில் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மீனவர்களோ அவர்களின் உமைகளோ உடனடியாக இந்திய அரசாங்கத்தினால் விடுவிக்கபடுவதில்லை எனவும் வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போது குறித்த விடயம் தொடர்பாக மீன்பிடிதுறை அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு அறியப்படுத்தியுள்ளதாகவும், எனவே அமைச்சர் மற்றும் இலங்கை இந்திய தூதரகங்கள் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் இருக்கும் தனது கணவனை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.