முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
2008-2009ஆம் ஆண்டுகளில் கொழும்பின் தெஹிவளை கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டனர்.
இது தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து மார்ச் மாதம் 7 ஆம் திகதி உத்தரவிட்டது.
அத்துடன், இன்று (11) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதற்கமைய, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.