web log free
February 01, 2026

ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா மன்னாரில் கைப்பற்றல்

மன்னார் மாவட்டம், இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சிப்பி ஆறு பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றினுள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி பெறுமதியான கஞ்சா இன்றையதினம் ஞாயிற்று கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

கடற்படை புலனாய்வு தகவலுக்கமைய மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்ச்சியின் பணிப்பில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயதிலக, உப பொலிஸ் பரிசோதகர் திலங்க தலைமையிலான குழுவினரே  சிப்பி ஆறு பாலத்திற்கு அருகாமையில் மறைத்து டிப்பர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட மேற்படி  89கிலோ 355 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்

அதே நேரம், கேரள கஞ்சாவினையும்அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய  டிப்பர் வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இதனை கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்

இவர்களில் இருவர் வவுனியா கூமாங்குளம் பகுதியையும், மற்றைய நபர் வவுனியா தவசிகுளம் பகுதியையும் சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்கள்  25, 44, 31 வயதுடைய நபர்கள் ஆகும்

சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் டிப்பர் வாகனம் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd