web log free
January 11, 2025

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

இந்திய அமைதிகாப்பு படையினரை இலங்கையிலிருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னைபூபதியின் 33வது நினைவுதினம் வவுனியாவில் இன்று(19) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.  

வவுனியாவில் கடந்த 1520 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டுவரும்  காணாமல் போனவர்களின் உறவினர்களால் குறித்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டது. இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு தீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்தவர்கள்.. 

இலங்கையில் அமைதியும் மற்றும் உண்மையான ஜனநாயகமும் வரவேண்டும் என்பதே அன்னை பூபதி அம்மாவின் வேண்டுகோள். அவரது விருப்பத்தைத் அடைவதற்கு எங்களுக்கு அமெரிக்காவே தேவை என்றனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd