web log free
February 01, 2026

ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு பொரளை பொது மயான பூமியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு இன்றைய தினம் மலர் இட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் இன்று மாலை இந்த நிகழ்வானது இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை, ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற வருகின்ற 21ஆம் திகதி இலங்கையிலுள்ள அனைத்து கத்தோலிக்கப் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அன்றைய தினத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd