web log free
April 30, 2025

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் கண்டனம் வெளியிட்டதோடு, பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd