அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரான ரியாத் பதியுதீன் ஆகியோர் இன்று(24) அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கொழும்பிலுள்ள அவர்களது வீட்டில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.