கரைச்சி பிரதேச சபையினால் பன்நாட்டு நூல்கள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட மின்சார சபையின் பிரதம பொறியாளர் ஜீவிதன் அவர்கள் கலந்து கொண்டார்
விருந்தினர்களாக கோட்டக்கல்வி அலுவலர் தர்மரட்ணம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் கிரிதரன், ஜெயமாருதி ஓய்வு நிலை அதிபர்கள் சோதிநாதன் மற்றும் கனகரட்ணம் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் திருமதி. அன்னலிங்கம் அவர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் நூலக வாசகர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.