அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் முல்லைத்தீவில் இன்றைய தினம் (26) பத்து ஆர். பி. ஜி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு 5 ம் கண்டம் பகுதியில் வயல் நிலங்களை அண்மித்த பகுதியில் உள்ள வனப்பிரதேசத்தில் இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு இன்று விசேட அதிரடிப் படையினரை அழைத்து சென்று குறித்த பகுதியில் இருந்து பத்து ஆர் பி ஜி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த குண்டுகள் நீதிமன்ற அனுமதியுடன் செயலிழக்கச் செய்யப்படவுள்ளது.