web log free
September 16, 2024

மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

குழுநிலை விவாதமாக இடம்பெறவுள்ள இந்த விவாதம் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதிவரை 19நாட்களுக்கு இடம்பெற்று மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

குழுநிலை விவாதத்தில் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதங்கள் இடம்பெற்று அவற்றை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளினால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது.

இதேநேரம், எதிர்த்தரப்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முதலான கட்சிகளும் ஆதரவாக வாக்களித்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி என்பன பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தன.