ஜமேய்க்கா நாட்டிலிருந்து கூரியர் சேவை மூலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருட்களை இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருள் அடங்கிய இந்த பொதி, சீதுவையை தளமாகக் கொண்ட ஒரு தனியார் கூரியர் சேவை மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு முன்னர் நாட்டிற்கு வந்த அந்த பொதி குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், சுங்க அதிகாரிகள் அதன் பெறுநரை வரவழைத்து பொதியை சோதனையிட்டார்கள்.
இதன்போதே குறித்த பொதியிலிருந்து கொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது 44 வயதான கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் வசிக்கும் பொதியின் பெறுநர் சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.