இந்திய மற்றும் இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதியதாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழகத்தின் புதிய அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என இலங்கையின் வடபகுதி மீனவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.
இது தொடர்பில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.
தமிழகத்தின் புதிய அரசு இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சுடன் பேச்சுக்களை நடாத்தி இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வை வழங்கவேண்டும் என்றும், அதன் மூலமாக தமது வாழ்வாதாரத்தை மீட்டுத்தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.