எரிபொருள் தட்டுபாடு ஒரு பக்கம் இருக்க ஓன்லைனில் விறகு விற்பனை!!!!
நாடளாவிய ரீதியில் பாரிய எரிபொருள் தட்டுபாடுகள் மற்றும் விலையுயர்வுகள் நிலவிவரும் இந்நிலையில் உலகே திரும்பிப் பார்க்கும் வகையில் இலங்கையில் ஓர் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இன்று இணையத்தள பிரபல்ய வர்த்தக நிறுவனம் ஒன்று ஓன்லைன் மூலம் விறகு மற்றும் விறகு அடுப்புகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 5கிலோகிராம் விறகு 140ரூபாயிற்கும் ஒரு மண் அடுப்பும் 5கிலோகிராம் விறகும் 390ரூபாயிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது எந்த அளவு சாத்தியமாகும் என சிந்திக்க முன் இது தொடர்பில் இவ்விணையத்தள நிறுவன தலைவர் தனது முகநூல் பக்கத்தில் 'நாங்கள் விறகுகளை ஓன்லைனில் விற்பனை செய்வோம் என்று கற்பனை கூட செய்யவில்லை இது உண்மையில் வெற்றியளித்துள்ளது'என பதிவிறக்கம் செய்துள்ளார். அவர் தொடர்பில் வேறு எவ்வித பெயர் போன்ற தகவலும் இது வரை கிடைக்க பெறவில்லை என்பதையும் தெரிவிக்க வேண்டும்.