பாராமன்றத்தில் பணியாற்றும் சேவையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் 275 பேருக்கு PCR செய்யப்பட்டு அதில் 12 பேருக்கு Covid-19 தொற்று உறுதியாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா அதிகரித்து வரும் நிலையினால் பாராளுமன்றத்தின் சமையலறை மற்றும் சிற்றுண்டிச்சாலை என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக படைக்கள தளபதி சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் உணவு தேவையினை நிறைவு செய்ய வேண்டுமாயின் உணவுகளை தற்காலிகமாக வெளியில் இருந்து கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.