குருநாகல் பிரதேசத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளார் என கருதி குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு அழைத்து செல்லப்பட்டதன் பின்னர் அவர் திடீரென உயிர் பிழைத்து தப்பி சென்றுள்ளார்.
இவர் அதிக போதைப்பொருட்களுக்கு அடிமையாகி குருநாகல் வில்கொட வீதியில் விழுந்து கிடந்த நிலையிலே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ் இளைஞனுக்கு அருகில் செல்லும் போது உயிர் இழந்தது போல அவர் மீது ஈக்கள் மொய்த்து இருந்தன. எனவே தான் மக்கள் சந்தேகித்து பொலிஸ் மற்றும் சுகாதார பிரிவினர்க்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சில நிமிடங்களில் சுயநினைவு வந்து பின் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.