ஒருவார காலத்திற்கு மாத்திரம் நாட்டை முடக்குவதால் எவ்வித பயனும் ஏற்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் மூன்று வாரத்திற்காவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.