web log free
February 08, 2026

வரட்சியால் பல மாவட்டங்கள் பாதிப்பு

வரட்சியுடனான வானிலை காரணமாக பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வரட்சியினால் ஆறுகளின் நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில், மஹாவெலி கங்கையின் நீர் மட்டம் 42 வீதமாக குறைவடைந்துள்ளதுடன், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் 40 அடி வரை குறைவடைந்துள்ளது.

இதேவளை, வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல மாவட்டங்களிலும் வரட்சியுடனான வானிலை நிலவுகின்றது.

இந்த நிலைமை நீடிக்கும் பட்சத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் என இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில், குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd