சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்கான இலங்கையின் வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
அதேநேரம் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.