தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் கொவிட் செயலணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டதன் பின்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.