web log free
March 29, 2026

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 626 பேர் சிக்கினார்கள்!

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவிட் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், மேல் மாகாணத்துக்கு நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் 13 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd