web log free
March 27, 2026

இன்று முதல் சீனி , அரிசிக்கு நிர்ணய விலை

அத்தியாவசிய பொருள்களான சீனி மற்றும் அரிசிக்கான சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஒரு கிலோ பொதியிடப்பட்ட சீனி 125 ரூபாவுக்கும் பொதி செய்யப்படாத சீனி 122 ரூபாவுக்கும் விலை நிர்யணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிவப்பு சீனியின் விலை 128 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் விலை 125 ரூபாவாகவும் வெள்ளை அல்லது சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் நிர்ணய விலை 103 ரூபாகவும் நிர்ணகிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோ சிவப்பு நாடு அரிசி 98 ரூபாகவும் பச்சை அரிசி கிலோ அதிகூடிய விலையாக 95 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிர்ணய விலை நாட்டில் இன்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 #வர்த்தமானி #சீனி #அரிசி

Last modified on Friday, 03 September 2021 08:11
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd