“ரத்தரங்” என்று அழைக்கப்படும் தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார, அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.
16 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், “ரத்தரங்” என்று அழைக்கப்படும் தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார, அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
பின்னர் அவருக்கு காலி நீதவான நீதிமன்றம் பிணை வழங்கியது.
கடந்த மாதம் 26ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கிரிசாந்த புஷ்பகுமார, கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்றைய தினம் காலியில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய கிரிசாந்த புஷ்பகுமார, தன்மீது அண்மையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக, தனது மாகாண சபை உறுப்பினர் பதவி மற்றும் அரசியல் நடவடிக்கையில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.