அரசியலமைப்பு பேரவையில் இருந்து, விலகுவதாக சமல் ராஜபக்ச அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார்.
அத்துடன், நேற்று நடந்த அரசியலமைப்புப் பேரவையின் கூட்டத்தில் ஜனாதிபதியின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் இணைந்து, சமல் ராஜபக்சவை அரசியலமைப்பு பேரவை உறுப்பினராக நியமிக்க பரிந்துரைத்திருந்தனர்.
எனினும், கடந்த ஜனவரி மாதம் பேரவையின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக சமல் ராஜபக்ச அறிவித்திருந்தார்.