மகாவலி ஆற்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலமொன்றை நாவலப்பிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஆறு பிள்ளைகளின் தாயான 84 வயதுடைய நாவலப்பிட்டி பேலி வீதியை சேர்ந்த ஹெகலின்னாரங்கல என்பரவே இன்று சடலமாக மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்த தாய் காணாமல் போயுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் மகள் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த குறித்த ணெ்மணி நாவலப்பிட்டி பத்துருபிட்டிய பகுதியில் மகாவலி ஆற்றில் சடலமாக மிதப்பதாக பொலிஸாருக்கு பிரதேசவாசிகளினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.