8500 பட்டதாரிகளுக்கு இவ்வருடத்தில் ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தேசிய பாடசாலைகளுக்காக மேலும் 3500 ஆசிரியர்களை இணைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மடிகணனிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.