SPC ஒப்பந்தத்தின் இறுதி தொகுதியான சைனபார்ம் தடுப்பூசியின் கடைசி நான்கு மில்லியன் டோஸ் இன்று காலை கொழும்புக்கு வந்துள்ளது.
அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டு வான் வெளியூடாக இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற சீனா தடுப்பூசிகளின் மொத்த அளவு 26 மில்லியனாக அதிகரித்துள்ளது, இது இலங்கையின் மொத்த தடுப்பூசியின் 80% க்கும் மேலானது என சீன தூதரகம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.