ஸ்ரீலங்காவின் தடுப்பூசி பிரச்சாரம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு உள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், ஆயுதப்படை மற்றும் காவல்துறை, அரசு ஊழியர்கள் மற்றும் பிற அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் கிட்டத்தட்ட 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போட வழிவகுத்தன.
அக்டோபர் மாத இறுதிக்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு வைத்துள்ளோம். அதுவும் வெற்றியளிக்கும் என நம்புகிறேன் என்று ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.