மட்டக்களப்பு குருமண்வெளி பிரதேசத்தில் காணாமல் போன 68 வயதான முதியவர் ஒருவரின் சடலம் நேற்று மாலை மட்டக்களப்பு குளத்தில் கரை ஒதுங்கியுள்ளது.
இலக்கம் 12 குருமண்வெளியை இருப்பிடமாக கொண்ட 68 வயதான குமரையா கோபாலசாமி என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
21ம் திகதி இரவு 11 மணி வரை தனது இல்லத்தில் இருந்த அவர் நேற்று மாலை பிரதேச வாசிகளால் மட்டக்களப்பு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளக்கரையில் இருந்து மீட்கப்பட்ட ஊண்றுக்கோல் மட்டும் மின்சூழ் என்பன அன்னாருடையது என பிரதேச வாசிகள் உறுதிப்படுத்தி உள்ள நிலையில் களவாஞ்சிக்குடி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.