கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த மக்களுக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட கூடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் இந்த நிலைமைகளை அறிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்ட சுகாதார சேவையின் தொற்று நோய் மற்றும் கொவிட் தொற்றினை தடுக்கும் இராஜாங்க அமைச்சின் பதில் செயலாளர் விசேட வைத்தியர் லால் பனாபிட்டிய,
"கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த மக்களுக்கு நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட கூடும். சிலருக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படகூடும்.
அனைவருக்கும் இல்லை என்ற போதிலும் அதிகமானோருக்கு இந்த பிரச்சினை ஏற்பட கூடும். சிறியளவில் அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நீண்ட நாட்கள் காத்திருந்தால் ஆபத்தான நிலைமைக்குள்ளாக நேரிடும் என்பதனால் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்தது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.