வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு செய்து வெளியிட்ட 19 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சங்கானையைச் சேர்ந்த சந்தேக நபரான இளைஞர் சுன்னாகம் நாகம்மா வீதியில் வைத்து இன்று (28) கைது செய்யப்பட்டார்.