செபம் செய்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறையை சேர்ந்த 51 வயதான செபபாக்கியம் கிரேஸ் மணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் நேற்று பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதை தொடர்ந்து அவருக்கு தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.