நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளது.
இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
எனினும், கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளை மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் எனவும் இராணுவத் தளபதி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.