web log free
January 12, 2025

ஒன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளாததால் மகனை அடித்து கொன்ற தந்தை

இலங்கையில் தந்தை ஒருவர் மகனை படிப்பதற்காக கண்டித்தமையினால் ஏற்பட்ட காயம் காரணமாக மகன் உயிரிழந்துள்ளார்.

காலி, மஹமோதர, சியம்பலாஹேன பிரதேசத்தை சேர்ந்த கிம்ஹான் விமுக்தி என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். அவர் இம்முறை சாதாரண பரீட்சைக்கு ஆயத்தமாக இருந்தவராகும்.

குறித்த மாணவன் சில மாதங்களாக ஒன்லைன் கற்கை நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் தந்தை கண்டித்துள்ளார்.

கோபம் காரணமாக மகனின் முதுகின் மீது துடைப்பத்தால் அடிக்க அடிக்க தந்தை முயற்சித்த போது அதனை தவிர்க்க மகன் முயற்சித்துள்ளார். இதன் போது அந்த தாக்குதல் அவரது தலையில் விழுந்தமையினால் மகன் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த மகன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

தனது மகனை மிகவும் அன்பாக வளர்த்த தந்தை, கல்வி நடவடிக்கை இடைநடுவில் நின்றுவிடும் என்ற அச்சத்திலேயே தாக்கியுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Last modified on Friday, 01 October 2021 05:44
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd