நேற்று ஒரே நாளில் மாத்திரம் மேல் மாகாணத்தில் 1156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட இவர்களில் 531 பேர் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களுள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ள 54 நபர்கள் மற்றும் ஊழல் குற்றங்களில் தொடர்புடைய 491 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் தேசபந்து தென்னக்கோனின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.