உலகளாவிய ரீதியில் மறைக்கப்பட்ட சொத்துக்கள் அடங்கிய ஆவணங்களை Pandora papers வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் (Nirupama Rajapaksa) பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சமகால ஆட்சியாளர்களான ராஜபக்ஷ சகோதர்களின் நெருக்கிய உறவினர் ஆவார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட நிருபமா 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் பிரதி அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
2016 ஆம் ஆண்டில் நிருபமாவின் சகோதரான பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) சம்பந்தப்பட்ட ஒரு ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் தொடர்பாக அவர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் மாளிகை ஒன்று கட்டுவதற்காக பொது மக்களின் நிதியை பயன்படுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளது. நிருபமாவின் கணவரான நடேசன் மற்றும் சமகால நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் தாம் தவறு செய்யவில்லை என மறுத்துள்ளனர்.