web log free
May 13, 2026

வைத்தியர் அனில் ஜாசிங்கவுக்கு ஏற்பட்ட நிலை

தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்ற சுற்றாடல் அமைச்சின் செயலாளர், முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க விமான நிலையத்தில் நேற்று (03) அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

தடுப்பூசி அட்டையினை எடுத்துச் செல்லாமை காரணமாகவே அவர் இவ்வாறு அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அவர் விமானத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

இதனையடுத்து, அனில் ஜாசிங்க தமது தடுப்பூசி அட்டையின் படத்தைக் கையடக்க தொலைபேசியில் பெற்றுக்கொண்டுஇ அதனைக் காண்பித்த நிலையில்இ விமானத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

 
Last modified on Monday, 04 October 2021 09:58
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd