க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும்போது இதனைத் தெரிவித்தார்.
க.பொ.த உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாடங்களை முடிப்பதற்கு தேவையான நேரம் வழங்கப்படும் என்றும் பரீட்சை திகதி குறித்து ஒரு உறுதியான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.