நுவரெலியா, ராகலவத்தை தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் கொண்ட குடும்பம் உயிரிழந்ததுள்ளது.
நேற்றிரவு இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்
ஒரு வயது, 11 வயது சிறுவர்கள், 32 மற்றும் 55 வயதுடைய இரண்டு பெண்கள் மற்றும் 60 வயது ஆண் ஒருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறுகையில், நேற்று தீ விபத்து நடந்த இடத்தை குற்றப்பிரிவு அதிகாரிகள் பார்வையிட்டனர்
விவரங்கள் இன்று வலப்பனை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.