web log free
September 12, 2025

இலங்கையில் மீண்டும் முடக்கம் நீடிப்பு!

தற்போது இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கோவிட் தொற்று காரணமாக நாட்டில் தொடர்ந்து அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடந்த முதலாம் திகதி தளர்த்தப்பட்டது.

இருப்பினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் காணப்பட்டது.

இந்த நிலையில் மாகாணங்களுக்கு பயணத் தடையானது 15ஆம் திகதி நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கோவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போது இந்த பயணத்தடையை மேலும் நீடிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

Last modified on Friday, 08 October 2021 11:20
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd