web log free
February 01, 2026

ஜனாதிபதியிடம் அரசின் பாதுகாப்பு குறித்து பேசிய விமல் வீரவன்ச

இந்த அரசைப் பாதுகாக்கவும், அபிலாஷைகளை நிறைவேற்றவும் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதியும் நீண்ட நேரம் பேசியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. “அரசாங்கத்தின் பாதை மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்து ஜனாதிபதி இதன்போது விரிவாக பேசியுள்ளார்.

அத்துடன், கோவிட் தொற்றுநோய் எதிர்பாராத விதமாக பரவியமை பற்றியும், அரசாங்கம் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் கூட்டாக செயற்பட்டு நாட்டை முன்னேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து பேசிய அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்,

“நாங்களும் தவறுகள் செய்திருக்கலாம். எனினும், அவற்றை சரிசெய்வோம். நாம் அனைவரும் இந்த பயணத்தில் கூட்டாகச் சென்றால், எங்களை யாரும் பிடித்து இழுக்க முடியாது.

இது நாம் அனைவரும் உருவாக்கிய அரசாங்கம். எனவே, இந்த அரசைப் பாதுகாக்கவும், அபிலாஷைகளை நிறைவேற்றவும் நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம்.” என ஜனாதிபதியிடம் கூறியதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Last modified on Saturday, 09 October 2021 05:58
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd