எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தடுக்கி விழுந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அலுவலகத்திற்கு சென்று திரும்பும் போதே அவர் இவ்வாறு தடுக்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற ஊழியர்கள் இணைந்து அவரை தூக்கியுள்ளனர்.
தடுக்கி விழுந்ததில் கிரியெல்லவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.